Saturday, 10 February 2018

உலகிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையம் இதுதான்!!

உலகிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்னும் சிறப்பைப் பெற்றுள்ளது துபாய் விமானம் நிலையம். இந்த விமான நிலையத்தில் ஒவ்வொரு ஆண்டும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை சேர்த்து எடுக்கப்பட்ட கணிப்பிலும், துபாய் விமான நிலையமே முக்கிய இடம் வகிக்கிறது.
கடந்த ஆண்டு துபாய் விமான நிலையத்தை, 88.2 மில்லியன் மக்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்நிலையில், இந்த ஆண்டு 2.4 சதவிதம் அதிகரித்து 90 மில்லியன் மக்கள், இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த கருத்துக் கணிப்பில், சீனாவைச் சேர்ந்த 2.2 மில்லியன் மக்களும், ரஷ்யாவைச் சேர்ந்த 1.3 பில்லியன் மக்களும் துபாய்க்கு சென்றுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

Author: verified_user

0 comments: