Monday, 12 February 2018

துபாயில் உலகின் மிக உயரமான ஹோட்டல் இன்று திறந்து வைப்பு! (படங்கள்)

உலகின் மிக உயரமான ஹோட்டல் இன்று (12.02.18) துபையில் திறக்கப்படுகிறது.

உலகிலேயே மிக உயரமான பில்டிங் என்ற பெருமையை புரூஜ் கலீபா (Burj Khalifa) ஏற்கனவே தக்கவைத்துள்ள நிலையில் தங்கும் விடுதிகளிலேயே மிக உயரமான விடுதிகள் என்ற பெருமையை போட்டி போட்டு சேர்க்கத் துவங்கியுள்ளது துபை.

உலகின் மிக உயரமான ஹோட்டல் என்ற பெருமையை இதுவரை துபை ஷேக் ஜாயித் சாலையில் 1,603 அறைகளுடன் இயங்கி வரும் JW Marriott Marquis Hotel என்ற ஹோட்டலே தக்கவைத்து இருந்தது. 2012 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த ஹோட்டலின் உயரம் 1,165 அடியாகும். இந்த சாதனையை நாளை துபையில் திறக்கப்படவுள்ள இன்னொரு ஹோட்டல் முறியடிக்கவுள்ளது.

12.02.2018 அன்று அதே ஷேக் ஜாயித் சாலையில் DIFC cluster மற்றும் Emirates Towers அருகாமையில் திறக்கப்படவுள்ள Gevora என்ற புத்தம்புதிய ஹோட்டலின் உயரம் 1,167.78 அடியாகும் (376 மீட்டர்). 75 தளங்களுடன் உள்ள இந்த ஹோட்டலில் 528 அறைகள் மட்டுமே உள்ளன.

துபையில் மேலும் 2 மிக உயரமான ஹோட்டல்களும் இயங்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. Rose Rayhann,என்ற ஹோட்டல் 1,093 அடிகளுடனும், Burj Al Arab என்ற ஹோட்டல் 1,053 அடிகளுடனும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் 5 பில்லியன் திர்ஹம் செலவில் Emirates Towers Business Park என்ற விடுதியும், Uptown Dubai என்ற அதி உயர இரட்டை விடுதியும் கட்டப்பட்டு வருகின்றன. இதன் திறப்பு விழாக்களின் போதே இதன் உயரங்கள் குறித்த விபரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: