Wednesday, 14 February 2018

பணிப்பெண்களை அனுப்ப பிலிப்பைன்ஸ் தடை செய்தமையினால் குவைத் எடுத்துள்ள அதிரடி முடிவு!

குவைத் பாராளுமன்ற கூட்டத்தில் சில நாடுகளிலிருந்து வீட்டுத் தொழிலாளர்களை அழைத்து முடிவு எடுக்கப்பட்டது: சில நாட்களுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் பணிப்பெண் ஒருவர் உடல் குளிர்சாதனப் பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட நிலையில்.பிலிப்பைன்ஸ் அரசு வெளியிட்ட அறிவிப்பால் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் குவைத்திலிருந்து தங்கள் நாடுகளுக்கு திருபிய வண்ணம் உள்ளனர்.

இதையடுத்து இன்று பாராளுமன்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் Khaled Al-Roudhan அவர்கள் பரிந்துரை செய்தார்.

இதன் அடிப்படையில் வங்கதேசம், நேபாளம், வியட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களை குவைத்தில் பணிப்பெண் வேலைக்கு அழைத்து வர விரைவில் விசா வழங்க அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
(குவைத் தமிழ் பசங்க)

Author: verified_user

0 comments: