Saturday, 24 February 2018

துபையில் ஆண்ட்ராய்டு போன் மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம்!

துபையில் பார்க்கிங் கட்டணங்கள் செலுத்துவதற்கு பல்வேறு வசதிகள் உள்ளன. நாணயங்கள், எஸ்எம்எஸ் மற்றும் ப்ரீபெய்டு பார்க்கிங் கார்டுகள் என உள்ள வசதிகளுடன் பொது போக்குவரத்து டிக்கெட்டாக பயன்படும் நோல் கார்டுகளை (NOL Cards) கொண்டு ஆண்ட்ராய்டு போன்களில் மூலம் செலுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே நோல் கார்டுகளை கொண்டு பார்க்கிங் டிக்கெட்டிங் மெஷின்களில் டிக்கெட் எடுக்கும் வசதி கடந்த 2009 ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது ஆண்ட்ராய்டு போன்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது, விரைவில் இதரவகை போன்களுக்கும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என துபை போக்குவரத்து துறை (RTA) அறிவித்துள்ளது.

இத்திட்டத்தில் இணைவதற்கு உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைல் போனிலிருந்து துபை போக்குவரத்து துறையின் RTA Dubai app (ஆப்பை) தரவிறக்கம் செய்து கொண்டு அதிலுள்ள பார்க்கிங் கட்டணம் செலுத்த தரப்பட்டுள்ள வாய்ப்பிற்குள் சென்று உங்களுடைய நோல் கார்டுகளை லேசாக தட்டுவது அல்லது காட்டுவதன் மூலம் தானாகவே அதிலிருந்து கட்டணத்தை எடுத்துக் கொள்ளும். இதற்காக தற்போது இதர வகை சேவைகளின் மீது கூடுதலாக வசூலிக்கப்படும் 30 பில்ஸ் (காசுகள்) பரிமாற்ற கட்டணமும் (Transaction Fee) வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்


Author: verified_user

0 comments: