Thursday, 15 February 2018

சாலையில் உறங்கிக்கொண்டிருந்த மாற்று திறனாளியை தாக்கிய போலீசார்! அதிர்ச்சிச் சம்பவம்

ஜார்கண்டில் சாலையில் உறங்கிக்கொண்டிருந்த மாற்று திறனாளியை போலீசார் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஜாம்சட்பூரில் ஜூப்லி பார்க் அருகே மாற்றுத்திறனாளி ஒருவர் சாலையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் வந்த போலீசார் மாற்றுத்திறனாளியை உடனடியாக எழுந்து செல்லுமாறு தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த மாற்றுதிறனாளியை போலீசார் தாக்கினர். 

மேலும் அவரை ரோட்டில் இழுத்து சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாற்றுதிறனாளிக்கு லேசான காயம் ஏற்பட்டது. மாற்றுத்திறனாளியை தாக்கிய போலீசாருக்கு பொதுமக்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பிரசாத் எஸ்.ஐ கூறுகையில்,

மனநிலை பாதிக்கப்பட்ட நபர் கார்கள் மீது கற்கள் வீசுவதாக புகார் எழுந்தது. நாங்கள் அவரை துன்புறுத்தவில்லை. அவரை விரட்டுவதற்காகத்தான் லத்தியை பயன்படுத்தினோம் என கூறினார்.

Author: verified_user

0 comments: