Saturday, 10 February 2018

சவூதி அரேபியா மன்னருடன் இந்திய வெளியுறவுத்துறை சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு!

சவூதி அரேபியா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.

முன்னதாக அவர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சரையும் சந்தித்து இந்தியா-சவூதி நட்பின் அடிப்படையில் இரு நாடுகளின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேச்சு நடத்தியதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 30 லட்சம் இந்தியர்கள் வசிக்கும் சவூதிக்கு சென்றுள்ள சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டு தலைவர்களுடன் இருநாடுகளின் கூட்டுத் திட்டங்கள் குறித்து விவாதித்துள்ளார்.

Author: verified_user

0 comments: