Saturday, 17 February 2018

சவூதி செல்வந்தரால் உயில் எழுதப்பட்ட இலங்கை புண்ணியவான் அடையாளம் காணப்பட்டார்!

சவூதி அரேபியாவில் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் தொழில் புரிந்த இலங்கையர் ஒருவருக்கு தனது எஜமானால் எதிர்பாராத வகையில் அதிஷ்டம் கிடைத்துள்ளது.

சவூதி அரேபிய எஜமான் ஒருவர் தன்னிடம் விசுவாசமாக பணிபுரிந்த இலங்கை நபருக்கு தனது இறுதி விருப்ப உயில் பத்திரத்தில் ஒரு பங்கை ஒதுக்கியுள்ளார்.

எழுதப்பட்ட உயிலுக்கு அமைவாக அதற்கு பெறுமதியான பணத்தை பெற்றுக்கொடுக்க இலங்கை நபரின் தகவல்களை பெற்று தருமாறு உயில் எழுதிய சவூதி எஜமானின் புதல்வர், ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்திருந்தது.

இலங்கையை சேர்ந்த மொஹமட் ஷியான் ஹமீட் லெப்பை என்பவரே உயிலில் பங்காளியாக பெயரிடப்பட்டுள்ளார்.

20 வருடங்களுக்கு முன்னர் எடுத்த புகைப்படத்தை தவிர இலங்கை நபரின் வேறு எந்த விபரங்களும் சவூதி எஜமானிடம் இல்லை பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையயில் பத்திரிகை வாயிலாக தேடப்பட்டு அந்த அதிஷ்டத்திற்கு சொந்தக்காரரான “மொஹமட் ஷியான் ஹமீட் லெப்பை” என்பவர் இன்று(17-02-2018) பொல்கஹவெல பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது விசுவாசத்திற்கும், நம்பக தன்மைக்கும் கிடைத்த மாபெரும் வெகுமதியாகும்.

எழுதப்பட்டது எங்கிருந்தாலும் கிடைத்தே தீரும் என்பதற்கு இந்த வரலாற்று உண்மை சான்றாகும்.

(அல்மசூறா நியூஸ்)

Author: verified_user

0 comments: