Monday, 5 February 2018

சண்மையிட்டுக் கொள்ளும் மாமி, மருமகள் மத்தியில் இப்படியும் ஒரு உறவு! என்னவொரு ஒற்றுமை!

அல்பிட்டிய பிரதேசத்தில் மாமியாரும் மருமகளும் சேர்ந்து கொள்ளைகளில் ஈடுபட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அல்பிட்டிய கனேமுல்ல என்னும் பகுதியில் தனது மருமகளுடன் இணைந்து பெண்களின் கைப்பைகளிலிருந்து பணம், பொருட்களை கொள்ளையிட்ட பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சன நெரிசல் மிக்க இடங்கள், பல்பொருள் அங்காடிகளில் இந்த இரண்டு பெண்களும் தங்களது கைவரிசையை காட்டி வந்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 59 வயதான பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காலி நகரில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பெண் ஒருவரின் கைப் பைக்குள் இருந்து 85000 ரூபா பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தியிருந்தனர்.

கொள்ளைச் சம்பவத்துடன் குறித்த பெண்ணின் மூன்றாவது மகனின் மனைவியும் இணைந்து கொண்டிருந்தார் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. மகனின் உதவியுடன் கொள்ளையிடுவதாகவும் தமக்கு கொள்ளையிடும் பணத்தில் சிறுதொகை கிடைக்கப் பெறுவதாக கைது செய்யப்பட்ட 59 வயதான பெண், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

Author: verified_user

0 comments: