Thursday, 8 February 2018

அமீரகத்தில் பொலிஸுக்கு அவதூறு மெயில் அனுப்பியவருக்கு 5 லட்சம் திர்ஹம் அபராதம் விதிப்பு!

இந்தியாவைச் சேர்ந்த 25 வயது தொழிலாளர் ஒருவர் தன்னுடைய ஐபோனிலிருந்து துபை போக்குவரத்துத் துறையை நிந்தித்து மெயில் ஒன்றை அனுப்பினார். அதில் தன்னைப் போன்ற ஏழைகளிடமிருந்து காசு பறிக்கும் நோக்கத்துடன் மீண்டும் மீண்டும் கார் ஓட்டுனர் பயிற்சியின் போது தோல்வியடையச் செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஈமெயிலை கண்ணுற்ற துபை போக்குவரத்துத் துறையினர் தங்கள் மீது கூறப்பட்டுள்ள பல அவதூறுகளை கண்டு அதிர்ச்சியுற்று போலீஸில் புகார் தெரிவித்தனர். காவலர்கள் அந்த நபரை கைது செய்தும், அவர் ஈமெயில் அனுப்பப் பயன்படுத்திய ஐபோனை கைப்பற்றியும் நீதிமன்றத்தில் ஓப்படைத்தனர். தன் குற்றத்தை ஒப்புக் கொண்டவர் தான் கோபத்தில் அவ்வாறு செய்து விட்டதாக சமாதானம் கூறினார் எனினும் ஏற்கப்படவில்லை.

நீதிமன்றம், ஒரு அரசு நிறுவனத்தை பற்றி அவதூறு கூறியது மன்னிக்க முடியாத குற்றம் என்றதுடன் 5 லட்சம் திர்ஹம் அபராதம், 3 மாத ஜெயில் வாசத்திற்குப் பின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: