Monday, 12 February 2018

இந்தோனேஷியாவில் 35000 கிலோ விமானத்தை தள்ளிச் சென்ற ஊழியர்கள் (வீடியோ)

கருடா இந்தோனேஷியா இது இந்தோனேஷிய அரசின் விமான நிறுவனம். இங்குள்ள 'கிழக்கு நுஸா தெங்கரா' என்ற பிரதேசத்தின் டம்போலகா விமான நிலையத்தில் அதன் ஊழியர்கள் சுமார் 20 பேர் சுமார் 35,000 கிலோ எடையுடைய விமானத்தை அதன் ஓடுதளத்தில் ஒரு காரை சாலையில் தள்ளிச் செல்வது போல் தள்ளிச் சென்ற வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

விமான பிரேக் டவுனாகி ஓடுதளத்தில் நின்றுவிட்டது என பயணிகள் தெரிவித்திருக்கையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள விமான நிறுவன அதிகாரி ஒருவர் 'தரையிறங்கிய விமானம்' சரிவர வளைவில் பார்க் செய்யப்படாததால் சற்று தள்ளிவிட்டு சரி பண்ணி நிறுத்தினோம், இதற்காக விமானத்தை தள்ளிச் செல்லும் pushback கருவி தேவைப்படவில்லை என கூறினார்.

என்ன விளக்கம் சொன்னாலும் மானம் காத்துல பறந்தது, பறந்தது தான்!

Source: dailymail.co.uk
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: