Monday, 12 February 2018

340 உள்ளுராட்சி சபைகளில் 239 சபைகளை மகிந்த கட்சி கைப்பற்றியது. வந்துட்டேன்டு சொல்லு!

இம்முறை உள்ளூராட்சி மன்றத் ​தேர்தலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 239 உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 41 உள்ளூராட்சி மன்றங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 34 உள்ளூராட்சி மன்றங்களையும் கைப்பற்றியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 7 உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்ற முடிந்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கை தமிழரசுக் கட்சி 34 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை பெற்றிருந்தாலும், ஒரு சில இடங்களில் அக்கட்சி தனித்து ஆட்சியமைப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பன 2 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலையிலுள்ளது. கண்டி மாநகர சபையை ஐக்கிய தேசியக் கட்சி 19 ஆசனங்களுடன் கைப்பற்றியுள்ளது.

Author: verified_user

0 comments: