ஓமன் நாட்டின் முதைபி மாகாணத்தில் அல் கஸ்பா எனுமிடத்தில் கி.மு.3,100 ஆண்டுகளுக்கு முந்தைய அதாவது வெங்கல காலம் என வரலாற்றில் அறியப்படும் காலத்தை சேர்ந்த மண்ணாலும் கற்களாலும் களியாலும் கலந்து கட்டப்பட்ட கோபுரம் போன்ற சிதிலமான கட்டிடமும், செம்பு மற்றும் வெங்கல பொருட்கள், ஆயுதங்கள் தயாரிக்கப்ப பயன்பட்ட தொழிற்கூடமும் ஜெர்மானிய, ஓமானிய கூட்டு அகழ்வாய்வு குழுவால் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த ஜனவரி மாதம் இரும்பு காலத்தை சேர்ந்த சுமார் 3,000 ஈட்டி முனைகளும், 10 பாம்பு வடிவங்களும் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கி.மு. 2,500 முதல் 2,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக நம்பப்படும் 5 குடியிருப்பு மற்றும் கல்லறை பகுதிகளும் சஹம் மாகாணத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
0 comments: