Wednesday, 7 February 2018

மாதம் 30 இலட்சம் சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்! எப்படி என்று தெரியனுமா?

சீனாவைச் சேர்ந்த சன் சுயாங் என்ற 7 வயது சிறுவன் யோகா மையங்களில் யோகா கற்றுக்கொடுத்து இலங்கை மதிப்பில் சுமார் 30 இலட்சத்தை மாதாந்தம் சம்பாதித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு வயதிலிருந்து யோகா கற்று வந்த குறித்த சிறுவன் சிறிய வயதிலேயே யோகா மூலம் அதிக வருமானம் ஈட்டும் நபராக பெயர்பெற்றுள்ளான்.

யோகாவின் மூலம் பல நோய்கள் குணமடைவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், குறித்த சிறுவனின் யோகா திறமையினைப் பார்க்கும் மக்கள் யோகா கற்றுக்கொள்ள ஆர்வமுடன் உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.


Author: verified_user

0 comments: