Sunday, 4 February 2018

தீவிர பயிற்சியால் 190 கிலோவிலிருந்து எடையை 120 கிலோவாக குறைத்த 12 வயது குண்டுப் பையன் !

உலகின் மிக குண்டான 12 வயது சிறுவன் கடின பயிற்சியின் மூலம் சராசரி வாழ்க்கைக்கு திரும்புகிறான்

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் ஆர்யா பெர்மானா (Arya Permana) சுமார் 190.5 கிலோ (30 கல் (Stone) என்கிற இந்தோனேஷிய அளவு) எடையுடன் பள்ளிக்குச் செல்ல முடியாமலும், நடக்க ஓட முடியாமலும், நண்பர்களுடன் விளையாட முடியாமலும் மிகுந்த சிரமத்தை 10 வயது முதல் சந்தித்து வந்தான்.

தற்போது கடுமையான உணவுப் பத்தியம் (டயட்) கடைபிடித்தது மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டதன் மூலம் சுமார் 70.2 கிலோ (12 கல்) எடையை இழந்துள்ளதன் மூலம் ஓரளவு நடக்க, ஓட, விளையாட, பள்ளி செல்ல ஆரம்பித்துள்ளான்.

கடந்த வருடம் அறுவை சிகிச்சை மேற்கொண்டதன் மூலம் சுமார் 19 கிலோ (3 கல்) எடையை இழந்தான் என்றாலும் இந்த அறுவை சிகிச்சை பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தியது குறிப்பாக உணவு செரிமண பிரச்சனைகள். அவனால் தினமும் 4 ஸ்பூன் சாதமும் டயட் பால் மட்டுமே குடிக்க முடிந்தது ஆனால் சிகிச்சைக்கு முன் ஒரு நாளைக்கு 5 முறை சைவ, அசைவ உணவுகளை கட்டுக்கட்டியவன்.

இப்போது சீனி போன்ற சில உணவு வகைகளை தவிர்த்துவிட்டு நடை பயிற்சி, ஓட்டப் பயிற்சி, உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவதால் மிகவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் காணப்படுகின்றான். மேலும் பள்ளிக்கூடத்தில் சக மாணவர்களுடன் கலந்தும் விளையாடுவதால் மேலும் உடம்பு இழைத்துக் கொண்டு வருவதைக் கண்டு அவனது பெற்றோர் சந்தோஷமடைந்துள்ளனர்.

Source: India Today / Msn
தமிழில்: நம்ம ஊரான்


Author: verified_user

0 comments: