Sunday, 11 February 2018

கத்தார் - வக்ரா பகுதியில் சட்ட விதிகளை மீறிய 18 உணவுடன் தொடர்புடை விற்பனை நிலையங்களுக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்!

(அடையாளப்படம்)
கத்தார் வக்ராஹ் பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனையின் பின்னர் 18 உணவுடன் தொடர்புடைய வியாபார ஸ்தலங்களுக்கு அபராதம் விதித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம்(ஜனவரி) இடம் பெற்ற திடீர் சோதனையின் பின்னரே 135,000 றியால்கள் வரை அபராதம் அறவிடப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  307 சுாகாதரத்துறை ஊழியர்கள் பரிசோதனை பணிகளின் ஈடுபடுத்தப்பட்டதாக வக்ரா நகராட்சி மையம் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாவனைக்கு உதவாத 315 கீலோவுக்கு மேற்பட்ட நிறை உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Author: verified_user

0 comments: