Saturday, 24 February 2018

பெற்றோர்களே எச்சரிக்கை! சூடான சட்னி சட்டிக்குள் தவறி விழுந்து 1 ½ வயது குழந்தை மரணம்!

மஹாராஷ்டிரா மாநிலம் ஆம்பர்நாத் எனும் பகுதியில் உள்ள சாஸ்திரி நகரில் 18 மாத பெண் குழந்தை ஒன்று புதன்கிழமை அதிகாலையில் சூடான தக்காளி சட்னி சட்டிக்குள் (அண்டா / கொப்பரை) எதிர்பாராத விதமாக தவறிவிழுந்து இறந்தது.

தனுஷ்கா என்ற இக்குழந்தையின் தந்தை ஒரு இட்லி வியாபாரி என்றும் அதிகாலையில் வியாபாரத்திற்காக தக்காளி சட்னி தயார் செய்து கொண்டிருந்தபோது இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.

சூடான தக்காளி சட்னி சட்டிக்குள் விழுந்ததால் உடல் வெந்துபோன குழந்தையை உல்லாஸ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர் எனினும் சிகிச்சை பலனின்றி இறந்து போனதாக அறிவிக்கப்பட்டது.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: