Wednesday, 17 January 2018

BREAKING NEWS: சவூதி - மதீனா நகரில் 2.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

சவுதி அரேபியா, மதீனாவில் 2.5 ரிக்டர் அளவு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லையென சவுதி உள்நாட்டு விவகார அமைச்சு தெரிவித்துள்ள அதேவேளை மதீனா நகர்ப்பகுதியிலிருந்து 14 கி.மீ தொலைவில் நிலத்துக்கடியில் 7 கி.மீ ஆழத்தில் இந்நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பிற்பகல் 2.30 அளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள கட்டிட நிர்மாணப் பகுதியொன்றிலேயே இவ்வாறு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: