Monday, 15 January 2018

ஓடுபாதையிலிருந்து விலகி கடலின் கரையை தொட்ட துருக்கி விமானம்! - அதிர்ச்சி படங்கள்

துருக்கி நாட்டுக்குச் சொந்தமான ஏர் பெகாஸூஸ் (Air Pegasus) நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்றிரவு தலைநகர் அங்காராவில் இருந்து கருங்கடல் (Black Sea) கரையோர நகரான டிராப்ஸான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஒடுபாதையிலிருந்து விலகி கருங்கடலின் கரையோரம் சரிந்து நின்றது.
கிட்டதட்ட கடலுக்கு அருகே சென்றுவிட்ட இந்த விமானத்தில் 162 பயணிகளும், 2 விமானிகளும், 4 விமான பணியாளர்களும் இருந்தனர் எனினும் யாருக்கும் எத்தகைய காயமும் ஏற்படவில்லை என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Source: independent.ie
தமிழில்: நம்ம ஊரான்



Author: verified_user

0 comments: