Sunday, 14 January 2018

ஒரு கோப்பை கறிக் குழம்பிற்காக பரிதாபமாக உயிரை விட்ட கணவனும், மனைவியும்

சென்னையில் கறிக்குழம்பிற்காக நள்ளிரவில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஒரு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவருடைய அக்கா ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று இவரது வீட்டிற்கு விருந்தாளியாக வந்துள்ளனர்.

மோகனின் மனைவி சரளா எல்லா ஞாயிற்றுக் கிழமையும் கறிக்குழம்பும், குருமாவும் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் தனது கணவனின் அக்கா வந்த அன்று ஸ்பெஷலா எந்த உணவும் செய்யாமல் இருந்துள்ளார்.

மோகன் தனது அக்காவிற்கு கறிக்குழம்பு வைத்துக் கொடுக்கவில்லை என்ற கோபத்தில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

இவரது இந்த கொடூர செயலை இவர்களது 8 வயது மகள் ஒருவர் அவதானித்துள்ளார். தந்தை செய்யும் காரியத்தினை வெளியே கூறமுடியாமல் பயந்த சிறுமி தனது அம்மா தன் முன் கொலை செய்யப்படுவதைப் பார்த்துவிட்டு தூங்குவது போன்று நடித்துள்ளார்.

மனைவியை கொலை செய்த மோகன் இரவு முழுவதும் மனைவியின் சடலத்துடன் படுத்துவிட்டு காலையில் எதுவும் தெரியாதது போல் வெளியே சென்றுவிட்டார். ஆனால் அந்த 8 வயது சிறுமி விடாமல் அழுது கொண்டிருந்ததை அவதானித்த அக்கம் பக்கத்தினர் அச்சிறுமியை விசாரித்துள்ளனர்.

நள்ளிரவில் நடந்ததை அனைவரிடம் கூறினார் சிறுமி. விடயம் வெளியே தெரிந்துவிட்டது என்றும் இனிமேல் தப்பிக்க முடியாது என்று மோகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



ஒரு கறிக்குழம்பிற்காக இரண்டு உயிர்கள் பரிதாபமாக பலியாகியுள்ள பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Author: verified_user

0 comments: