Saturday, 20 January 2018

உலகின் மிக விலை உயர்ந்த பாஸ்போர்ட் எது தெரியுமா? காரணம் இது தான்!

உலக நாடுகள் தத்தமது நாடுகளின் பாஸ்போர்ட்கள் மீது கட்டணங்கள் நிர்ணயித்துள்ளன. அதன்படி தற்போது ஆகக்கூடிய விலையில் வழங்கப்படும் பாஸ்போர்ட்டாக ஆஸ்திரேலியாவின் 10 வருட பாஸ்போர்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் விலை 282 ஆஸ்திரேலிய டாலர்களாகும் (160 யூரோக்கள்). கடந்த 10 ஆண்டுகளில் படிப்படியாக 41 மடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து துருக்கியின் பாஸ்போர்ட் விலைப்பட்டியலில் 2 ஆம் இடம் வகிக்கின்றது. இதன் கட்டணம் 255 டாலர் (144 யூரோக்கள்). 2015 ஆம் ஆண்டு வரை துருக்கி பாஸ்போர்ட்டே உலகின் மிகக்கூடுதல் விலையுடையதாக இருந்தது, ஆஸ்திரேலியா அதை முந்தும் வரை. இன்னொரு புறம் விலை ஏற்றத்தை நிறுத்துங்கப்பா என்ற குரல்களும் எழத் தொடங்கியுள்ளன.

அதேவேளை ஹென்லி & பார்ட்னர்ஸ் எனும் நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டுள்ள தரப்பட்டியலில் ஆஸ்திரேலியா பாஸ்போர்ட் உலகளவில் 22 ஆம் இடம் வகிக்கின்றது. ஜெர்மனி பாஸ்போர்ட் உலகளவில் முதல்நிலை வகிக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

Sources: Indy 100 / Msn
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: