Saturday, 20 January 2018

உலகின் முதல் செயற்கை கருத்தரிப்பு ஒட்டகக் குட்டி துபையில் பிறந்தது (படங்கள்)

துபையில் செயல்படும் தனியார் ஒட்டக கருத்தரிப்பு ஆராய்ச்சி மையத்தில் உறைய வைக்கப்பட்ட உயிரணுவை கொண்டு கர்ப்பம் தரித்த ஒட்டகம் ஒன்று ஆரோக்கியமான பெண் ஒட்டகக் குட்டியை ஈன்றது, இது மனிதர்களுக்கு உறைநிலை உயிரணுக்களை கொண்டு செய்யப்படும் செயற்கை கருத்தரிப்பை அடிப்படையாக கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தனியார் ஆராய்ச்சி மையம் துபையின் பட்டத்து இளவரசருக்கு தனிப்பட்ட முறையில் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷஹீன் என்று பெயரிடப்பட்டிருந்த முன்னாள் ரேஸ் ஒட்டகத்திலிருந்து பெறப்பட்ட உயிரணுக்களை கொண்டும், இன்னொரு ரேஸ் ஒட்டகத்தின் கர்ப்ப அறையில் வளர்க்கப்பட்டதாலும் இந்த ஒட்டகக் குட்டியும் ரேஸ்களில் சாதிக்கலாம் என இதனை உருவாக்கிய மருத்துவர் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 30 எடையுடனும் ஆரோக்கியத்துடனும் பிறந்துள்ள இந்க பெண் ஒட்டகக் குட்டிளை 'பின்த் சஹீன்' என பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்



Author: verified_user

0 comments: