Saturday, 20 January 2018

சர்வதேச விண்வெளி நிலையத்தின் எச்சரிக்கைச் செய்தி! பூமியை நெருங்கி வரும் ஆபத்து?


பூமிக்கு அருகாமையில் மிகப்பெரிய விண்கல் ஒன்று வரவுள்ளதாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

2002 AJ129 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் எதிர்வரும் நான்காம் திகதி பூமிக்கு மிகவும் அருகாமையில் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விண்கல் 1.1 கிலோ மீட்டர் விட்டம் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல் பூமிக்கு மிகவும், சுமார் 74 இலட்சம் கிலோ மீற்றர் (7,403,00km) தூரம் வரை நெருங்கி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கு வாய்ப்பில்லை என நாசா தெரிவித்துள்ளது. இதனிடையே, பூமியின் சுற்றுப்பாதையின் 0.05 வானியல் அலகுகளில் விண்கற்கள் எங்கும் பயணம் செய்யக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பூமிக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுக்கருத்துகளைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(TW)

Author: verified_user

0 comments: