Saturday, 6 January 2018

‘வாட்’ வரியால் சவுதி அரேபியாவில் பணிபுரியும் இந்தியர்கள் பாதிப்பு!

‘‘சவுதி அரே­பியா மற்­றும் ஐக்­கிய அரபு எமி­ரேட்­சில் அறி­மு­க­மாகி உள்ள, ‘வாட்’ வரி­யால், அங்கு பணி­யாற்­றும் பெரும்­பா­லான இந்­தி­யர்­கள் பாதிக்­கப்­ப­டு­வர்,’’ என, அந்­நா­டு­க­ளுக்­கான இந்­தி­யா­வின் முன்­னாள் துாதர், தல்­மிஸ் அக­மது தெரி­வித்து உள்­ளார்.

அவர் கூறி­ய­தா­வது:சவுதி அரே­பியா, ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸ் நாடு­களில், இந்த ஆண்டு முதல், சரக்கு மற்­றும் சேவை­க­ளுக்கு, ‘வாட்’ வரி அம­லுக்கு வந்­துள்­ளது.இத­னால், அந்­நா­டு­களில், வாழ்க்­கைச் செல­வி­னம் உயர்ந்து விட்­டது. வீட்டு வாடகை, மருத்­துவ சேவை, பள்ளி கட்­ட­ணம், போக்­கு­வ­ரத்து மற்­றும் அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளுக்கு, மக்­கள் அதி­கம் செல­விட நேர்ந்­துள்­ளது.

இரு ஆண்­டு­க­ளா­கவே, கச்சா எண்­ணெய் விலை குறை­வின் தாக்­கத்­தால், வேலை­வாய்ப்­பும், ஊதிய விகி­த­மும் குறைந்­துள்­ளது. இத­னால், அந்­நா­டு­களில் பணி­யாற்­றும் இந்­தி­யர்­கள், தாய­கத்­திற்கு அனுப்­பும் தொகை­யும் குறைந்து வரு­கிறது.வளை­குடா நாடு­களில் இருந்து, இந்­தி­யர்­கள், ஆண்­டுக்கு, 3,500 கோடி டாலர், தாய­கத்­திற்கு அனுப்பி வந்த நிலை­யில், இது, 3,000 கோடி டால­ராக குறைந்­தி­ருக்­கும் என, தெரி­கிறது.
தற்­போது, புதிய வரிச்­சு­மை­யும் சேர்ந்து உள்­ள­தால், அந்­நா­டு­களில் குறைந்த ஊதி­யத்­தில் பணி­யாற்­றும் இந்­தி­யர்­க­ளால், தாய­கத்­திற்கு பணம் அனுப்ப முடி­யாத நிலை ஏற்­படும்.அதே சம­யம், வசிப்­பிட வசதி வழங்­கும் நிறு­வ­னங்­களில் பணி­யாற்­றும் தொழி­லா­ளர்­க­ளுக்கு, இந்த பாதிப்பு குறை­வாக இருக்­கும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
30 லட்சம்
சவுதி அரே­பி­யா­வில், 30 லட்­சம் இந்­தி­யர்­கள் வசிக்­கின்­ற­னர். துபாய், அஜ்­மன், அபு­தாபி உள்­ளிட்ட, ஏழு குட்டி நாடு­களை உள்­ள­டக்­கிய, ஐக்­கிய அரபு எமி­ரேட்­சில், 28 லட்­சம் இந்­தி­யர்­கள் வாழ்ந்து வரு­கின்­ற­னர்.

Author: verified_user

0 comments: