Monday, 22 January 2018

உலக கச்சா எண்ணை உற்பத்தி: மிக விரைவில் சவூதியை முந்தப் போகும் அமெரிக்கா

மிக விரைவில் எண்ணை உற்பத்தியில் சவுதி அரேபியாவை மூன்றாவது இடத்துக்குத் தள்ளி அமெரிக்கா இரண்டாவது இடத்தைப் பிடித்துக் கொள்ளும் என தகவல் வெளியிட்டுள்ளது சர்வதேச எரிசக்தி முகவர் அமைப்பு.
எண்ணை வர்த்தக எதிர்காலத்துக்கான மாற்றீடுகளை இப்போதிருந்தே திட்டமிடும் சவுதி அரேபியா, பல்வேறு மாற்றங்களைக் கண்டு வருவதுடன் சுற்றுலாத்துறையையும் ஊக்குவித்து வருகிறது. அரச நிர்வாகம் மற்றும் கொள்கை மாற்றங்களுடன் நிதி விவகாரத்திலும் கூடிய கவனம் செலுத்தும் தற்போதைய சவுதி நிர்வாகம், ஊழல் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையிலேயே அமெரிக்கா விரைவில் சவுதியை பின் தள்ளும் நிலை உருவாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளமையும் தற்போது ரஷ்யாவே முன்னணியில் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி வீடியோ வடிவில்

Author: verified_user

0 comments: