Monday, 15 January 2018

கடும் பணிப்பொழிகால் ஏற்பட்டுள்ள ஐஸ் கட்டிக்குள் புதைந்து உயிர் வாழும் முதலைகள் !


ஐஸ் கட்டிகளுக்குள் உயிர் வாழ்தல் என்பது நடவாத காரியம் பிற உயிர்களுக்கு ஆனால் முதலைகள் ஒரு வித உத்தியை கடைபிடித்து வாழும் என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் கடும் குளிர், பனிப்பொழிவு, மண்சரிவு என பலவகையான இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
வடக்கு கரோலினா மாகாணத்திலுள்ள சதுப்புநில ஷல்லோட் ஆறு அலிகேட்டர்கள் எனப்படும் முதலைகள் வாழும் பூங்காவாக நிர்வாகிக்கப்படுகிறது. தற்போது இந்த ஆறு முழுமையாக ஐஸாக உறைந்து போயுள்ளன. இதிலிருந்த முதலைகள் தங்களுடைய முழு உடலையும் ஐஸூக்குள் புதைத்தவாறு மூக்குப் பகுதியை மட்டும் வெளியே நீட்டி சுவாசித்து உயிர் வாழும் அரிய காட்சி வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது. இந்த உயிர் போராட்ட உத்தி (Survival Tactics) அவற்றிற்கு பரம்பரை மரபணுக்களின் வழியாகவே கிடைத்திருக்கும் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.
முதலைகள் பொதுவாக நீரில் குறைந்தபட்சம் 4 டிகிரி செல்ஷியஸ் (40 டிகிரி பாரன்ஹீட்) உஷ்ணம் வரை வாழும் தன்மை பெற்றவை. இந்த உறைநிலை ஐஸ் கட்டிகளுக்குள் உடல் அசையாத நிலையில் வெறும் சுவாசத்துடன் மட்டும் சுமார் 1 வாரம் வரை அவை உயிர் வாழ முடியும் என சதுப்புநில ஷல்லோட் ஆறு உயிரின பூங்கா பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Sources: Alert Science / AP / Emirates 247
தமிழில் : நம்ம ஊரான்



Author: verified_user

0 comments: