Thursday, 18 January 2018

அமீரகத் தயாரிப்பில் முதல் எலக்ட்ரிக் பஸ் அறிமுகம்!

எண்ணெய் வள நாடான அமீரகத்தில் எண்ணெய் தேவையில்லா முதலாவது முழு மின்சாரப் பேருந்தை அபுதாபி கலீபா பல்கலைக்கழக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் ஒரு அங்கமான மஸ்தார் கல்விக் குழுமமும் அபுதாபி போக்குவரத்து தொழில்துறையும் இணைந்து உருவாக்கியுள்ளன. இந்தப் பேருந்தின் பேட்டரிகளை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 150 கி.மீ தூரத்திற்கு தொடர்ந்து இயக்கலாம்.

சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஏதுவான இந்த பஸ்ஸில் 27 இருக்கைகளும், அதிகப் பயணிகள் நின்று பயணம் செய்வதற்கான இடவசதியும், தரைதள படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்திற்கு ஜெர்மனியின் சீமென்ஸ் நிறுவனம் வடிவமைத்த எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 18 ஆம் தேதி முதல் மஸ்தார் சிட்டியில் நடைபெறவுள்ள Abu Dhabi Sustainability Week, (ADSW) நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் இந்தப் பேருந்தை நேரில் பார்வையிட அனுமதிக்கப்படுவர். இந்தப் பஸ்ஸின் நீளம் 10.5 மீட்டர், அகலம் 2.5 மீட்டர்.(Visitors to the Abu Dhabi National Exhibition Centre during ADSW were able to view the new Eco Bus.)

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: