Thursday, 18 January 2018

ஹஜ் / உம்ராவின் போது வீல்சேர் உதவியாளர்களாக பணி வயது வரம்பு நிர்ணயம்!

இஸ்லாத்தின் புனிதக் கடமைகளான ஹஜ் மற்றும் உம்ராவை நிறைவேற்றுவதற்காக ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான முஸ்லீம்கள் சென்று வருகின்றனர். இவர்களின் வயதானவர்களும், உடல் தளர்ந்தவர்களும், நோயாளிகளும், மாற்றுத் திறனாளிகளும் அடக்கம்.

இத்தகைய உதவி தேவையுள்ள புனித யாத்ரீகர்களுக்கு உதவுவதற்காக வீல் சேரில் (சக்கர நாற்காலி) வைத்து தள்ளிச்செல்லும் அங்கீகரிக்கப்பட்ட வாடகை உதவியாளர்கள் உள்ளனர். உதவியாளர்களை வாடகைக்கு அமர்த்தாமல் உறவினர்களாலும் தள்ளிச் செல்லப்பட அனுமதி உண்டு.

இந்த வீல்சேர் உதவியாளர்களில் சிலரால் வயது மூப்பின் காரணமாக ஸபா மற்றும் மர்வா மலைகளுக்கு இடையேயான தொங்கோட்டத்தின் போது சரிவுகளில் சரிவர தள்ளிச்சென்று ஏற இயலவில்லை என்று எழுந்த புகாரைத் தொடர்ந்து இனி 25 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட உதவியாளர்கள் மட்டுமே வீல் சேர் தள்ளும் பணியில் ஈடுபடலாம் என 2 புனிதப் பள்ளிகளின் நிர்வாகத்தின் சேவை இயக்கப் பிரிவுக்கான இயக்குனர் (The director of mobility services at the presidency of the Two Holy Mosques) சலேஹ் அல் ஹொஸ்ஸாவி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: