Wednesday, 24 January 2018

அமெரிக்கா பனியில் சிக்கி உயிருக்கு போராடிய மூதாட்டியை காப்பாற்ற உதவிய நாய்!

அமெரிக்காவின் மிச்சிகன் பிராந்தியத்தின் நோர்வெல் டவுன்ஷிப் (Norvell Township) பகுதியில் காலையில் வழமையாக வீட்டை திறக்குமுன் அந்த குடும்பத்தினருடைய வளர்ப்பு நாய்கள் 2 வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்டன. அந்த நாய்கள் தங்கள் உரிமையாளர்களின் உடைகளை கவ்வி இழுத்து வெளியே வருமாறு சமிக்ஞைகள் செய்தன, இதுபோல் அவை ஒரு நாளும் நடந்து கொண்டதில்லையாம்.
கதவைத் திறந்தவுடன் வெளியே பாய்ந்தோடிய நாய்கள் அங்கே ஒரு மூதாட்டி சாதாரண ஓர் இரவு உடையுடன் பனியில் உறைந்து குளிரில் நடுநடுங்கியவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். நாய்களின் உதவியால் அந்த மூதாட்டியை மீட்ட அந்த வீட்டினர் அந்த மூதாட்டிக்கு தேவையான முதலுதவிகள் செய்து போர்வையால் மூடி வைத்து உயிரை காப்பாற்றி போலீஸ் மூலம் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு ஒப்படைத்தனர்.

மூதாட்டி அந்த இரவில் இங்கு எப்படி வந்தார்? எத்தனை மணிக்கு வந்தார்? எவ்வளவு நேரமாக குளிரில் தவித்து வந்தார்? வீட்டுக்குள் இருந்த நாய்கள் அந்த மூதாட்டி உயிருக்கு போராடுவதை எப்படி அறிந்தன? என அதன் உரிமையாளர்கள் வியக்கின்றனர். மூதாட்டி நாய்களின் உதவியால் மீட்கப்படும் போது வீட்டுக்கு வெளியே நிலவிய தட்பவெப்பம் 9 டிகிரி அதாவது -12 டிகிரி செல்ஷியஸ்.



Source: AP / Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: