Monday, 1 January 2018

இன்று முதல் இலங்கையில் இதற்குத் தடை!

உணவுப் பொதியிடல் செய்யும் பொலித்தீன் மற்றும் பெட்டி உள்ளிட்ட பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கான தடை இன்று முதல் கட்டாய அமுலுக்கு வருவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த தடை கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி விதிக்கப்பட்டது. எனினும் குறித்த பொருட்களின் பாவணையை குறைத்துக்கொள்ள கால அசகாசம் வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறு வழங்கிய அவகாரம் நேற்று நள்ளிரவு நிறைவுக்கு வந்தது.

இதற்கமைய தேசிய, சமய மற்றும் அரசியல் உள்ளிட்ட பொது நிகழ்வுகளில் இவ்வகையான பொலித்தீன் பொருட்களை பயன்படுத்துவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது பொலிதீன் விற்பனையை தடுக்க விசேட சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் மர்வின் தெரிவித்துள்ளார்.

Author: verified_user

0 comments: