Monday, 22 January 2018

இலங்கையில் நீராடி உயிரிழந்த சவூதி அரேபிய யுவதி! வதந்திகளை பரப்ப வேண்டாம்! (வீடியோ)

சென்ற வெள்ளிக்கிழமை(19-01-2018) காலையில் சவூதி அரேபியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த ஒரு குடும்பம் இலங்கையில் அமைந்துள்ள பெந்தோட்டை (Bentotta Beach) கடலுக்கு நீராடச் சென்ற வேளை அந்த தம்பதியினரின் 19 வயது மதிக்க தக்க இளம் பெண் நீரில் மூழ்கியுள்ளார்.
பின்னர் அங்கிருந்தவர்களால் அப்பெண் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே வபாத்தாகி (உயிரிளந்து)விட்டார்.
(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

இந்த சம்பவங்கள் அனைத்தும் அந்த பெண்ணின் குடும்பத்தாரின் முன்னிலையில் நடந்தவையாகும்.

எனினும், பலர் இந்த சம்பவத்தை திரிவுபடுத்தி
சவூதி பெண் இலங்கையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டு விட்டதாக சமூகவலை தளங்களில் Share பண்ணி வருகின்றனர்.
அது தவறான செய்தியாகும்.


-அல்மசூறா நியூஸ்

Author: verified_user

0 comments: