Friday, 5 January 2018

சவூதியின் மக்காவிலிருந்து சட்டவிரோத தங்க ஆபரணங்களுடன் வந்தவர் கைது!

44 இலட்சம் பெறுமதியுடைய தங்க ஆபரண நகைகளை சட்ட விரோதமான கொண்டு வந்த கல்முனை பிரதேசத்தினை சேர்ந்த 49 வயதுடைய நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சவுதி அரேபியா மக்கா நகரில் இருந்து நேற்றைய தினம் இலங்கை வந்துள்ள நிலையில் 814 கிராம் தங்க நகைகளை தன்வசம் கொண்டுவந்த போது சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் 10 லட்சம் ரூபாய் அபராத தொகையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Author: verified_user

0 comments: