Monday, 22 January 2018

மழை பெய்வதற்கு முன் அதிக வியர்வை தோன்றுவது ஏன்...?

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்போது நமக்கு வியர்வை தோன்றுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. வெப்பமான சூழ்நிலையில் நமது தோலில் உள்ள சுரப்பிகள் வியர்வையைச் சுரக்கின்றன. நமது தோலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும், உஷ்ணத்தின் பாதிப்பு ஏற்பட்டு தோல் வறட்சியடையாமல் இருப்பதற்காகவும், நமது உடல் செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே இது. நமது தோலில் உருவாகும் வியர்வை ஆவியாவது வெளிப்புரத்தில் உள்ள காற்றைப் பொருத்தே அமைகிறது.

வெயில் காலங்களில் காற்று அதிக வறட்சியுடன் இருக்கும். எனவே, நமது உடலில் தோன்றும் வியர்வை சற்று நேரத்தில் ஆவியாகிறது. ஆனால், மழை பெய்வதற்கு முன் காற்றின் ஈரப்பதம் சற்று அதிகமாகக் காணப்படும். ஏற்கெனவே காற்றில் நீராவித்துளிகள் கலந்திருப்பதே இதற்குக் காரணம். அவ்வேளையில் நமது தோலில் உள்ள வியர்வை ஆவியாவதற்கான வெப்பம் கிடைப்பதில்லை. எனவே, நாம் அதிக வியர்வையோடு இருப்பது போன்ற உணர்வு தோன்றுகிறது.

Author: verified_user

0 comments: