Monday, 15 January 2018

அமீரகத்தில் கடும் பனியால் வான் மற்றும் சாலை போக்குவரத்து பாதிப்பு! (படங்கள் இணைப்பு)

அமீரகத்தில் இன்று கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் அதிகாலை 3 முதல் காலை 9 மணி நிலவரப்படி துபை, ஷார்ஜா மற்றும் அபுதாபி விமான நிலையங்களுக்கு வர வேண்டிய 80க்கு மேற்பட்ட விமான சேவைகள் தரையிறங்க முடியாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன,

மேலும் பல விமானங்கள் தாமதமாகின்றன. அதேகால கட்டத்தில் துபை மற்றும் அபுதாபியிலிருந்து புறப்படும் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஷார்ஜாவிலிருந்து மட்டும் சில விமானங்கள் புறப்பட்டுச் சென்றன.

அதேபோல் சாலை போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளன. பல இடங்களில் வாகனங்கள் மோதிக் கொண்டதாலும் பாதிப்பு கூடுதலாக உள்ளது. போக்குவரத்து போலீஸார் வாகன போக்குவரத்தை சீராக்கும் நோக்கில் இன்று காலை முதலே கனரக வாகனங்கள் மற்றும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை இயக்குவதற்கும் தடை விதித்துள்ளனர்.

தற்போதுவரை சுமார் 120க்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்




Author: verified_user

0 comments: