Monday, 15 January 2018

இலங்கை சகோதரர் ஷிஃப்ரான் டுபாயில் மாரடைப்பினால் வபாத்!!

கொழும்பு இசிபத்தான கல்லூரியின் முன்னாள் மாணவரும் மொரட்டுவை பகுதியை சேர்ந்தவருமான நாகூர் ஷிப்ரான் எனப்படும் 39 வயது நபர் மாரடைப்பு காரணமாக டுபாயில் மரணமானார்.
(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..)

கண்டி உடதலவின்ன பகுதியில் இல்லற வாழ்வில் இணைந்த இவர் தனது நான்கு பிள்ளைகள் (3 பெண், 1 ஆண்) மற்றும் மனைவியுடன் டுபாயில் வசித்து வந்த நிலையிலேயே மேற்படி திடீர் மரணம் ஏற்பட்டுள்ளது.

ஜனாஸா நல்லடக்கம் டுபாயில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சகோதரர் நாகூர் ஷிப்ரானின் மேலான மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் வாடும் குடும்ப உறவுகளின் உள ஆறுதலுக்கும் பிரார்த்திப்போம்.
-அல்மசூறா நியூஸ்-

Author: verified_user

0 comments: