Sunday, 7 January 2018

உங்க உடம்பு எப்படி இருக்கு? சிறுநீரை பார்த்தே தெரிஞ்சுக்கோங்க..

இதை படித்ததும் வித்தியாசமாக தெரியலாம். ஆனால் இனி ஒவ்வொரு முறை டாய்லெட்டுக்கு செல்லும்போதும் உங்கள் உடல்நிலையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கிறதா அல்லது மருத்துவரை சந்திக்க வேண்டுமா என்பதை கீழ்க்கண்ட வழிமுறையின் மூலம் எளிதாக தெரிந்துகொள்ளலாம்.

ஆரஞ்சு நிறம்

அலர்ஜி மாத்திரைகள், கேன்சருக்கான கீமோதெரபி மருந்துகள், அளவுக்கதிமான விட்டமின் பி2 மாத்திரைகள் போன்றவை பயன்படுத்தும்போது ஆரஞ்சு நிறமாக சிறுநீர் வெளியேறலாம்.

நீர் அதிகமாக அருந்துங்கள்.. உடலில் நீர்த்தட்டுப்பாட்டால் சிறுநீரின் அடர்த்தி அதிகமாகி அடர் மஞ்சள் நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறமாகியிருக்கலாம். சில மணி நேரங்களில் மஞ்சள் நிறத்துக்கு வந்துவிடும்.

உங்கள் கண்களும் மஞ்சள் நிறமாக இருந்தால் உங்களின் கல்லீரல் சரியாக இயங்கவில்லை என்று அர்த்தம். உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள்.






பிங்க் மற்றும் சிவப்பு

இதைக்கண்டு உடனடியாக பயப்படத்தேவையில்லை. இது சில நேரம் உணவு மற்றும் மாத்திரைகளால் நிகழலாம்.

பீட்ரூட், பிளாக்பெரிஸ் போன்ற உணவுகளை சாப்பிட்டாலும் அந்த பழங்களின் நிறத்தால் இவ்வாறு அடுத்தநாள் சிறுநீர் நிறம் மாறியிருக்கலாம். இல்லையெனில் ஆண்டிபயாடிக், டிபி மருந்துகள் போன்றவற்றை பயன்படுத்துவதாலும் இதுபோன்று நிகழலாம்.

ஆனால் இது எதுவும் பயன்படுத்தாமல் பிங்க், சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் மருத்துவரை உடனே அணுகுங்கள்.

இது சில நேரம் சிறுநீரக தொற்று வியாதிகள், கிட்னி பாதிப்பு, கேன்சர் போன்ற நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.


பச்சை அல்லது நீல நிறம்

இது நம்மை ஷாக் ஆக்கலாம். இது அரிதாக நடப்பது தான். சாயம் பூசப்பட்ட ஐஸ்கிரிம் போன்ற சில உணவுகள் உண்பதால் அல்லது Amitriptyline, Indomethacin, and Propofol போன்ற மருந்துகள் பயன்படுத்துவதால் இவ்வாறு வரலாம்.

இது இல்லையெனில் அரிதான சிறுநீரக தொற்று நோய்கள், சிறுநீரக கல் போன்றவற்றின் அறிகுறியாக கூட இருக்கலாம்.


பிரவுன்

ப்ரவுன் நிறம் உடலின் தண்ணீர் பற்றாக்குறையின் அறிகுறியாக இருக்கலாம். நீர் அதிகமாக அருந்துங்கள். இருந்தும் சரியாக வில்லையெனில் கல்லீரல், சிறுநீரக நோய்களுகளின் அறிகுறியாக இருக்கலாம்.

சிறுநீர் ப்ரவுனாக இருப்பதுடன் அடிவயிற்றில் வலி, காயங்கள் உண்டானால் மரபணு மாற்றமாக இருக்கலாம். ரத்தமும் இந்த நிறத்தில் இருந்தால் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.


நுரை கிளம்பினால்

சாதாரணமாக சிறுநீர் கழிக்கும்போது வேகமாக வெளியேறினால் நுரை கிளம்பும். ஆனால் இது எல்லா நேரங்களிலும் தொடர்ந்தால் மருத்துவரை சந்திப்பது நல்லது.

நுரை அல்லது சத்தத்துடன் சிறுநீர் வெளியேறினால் அது அளவுக்கதிகமான புரதத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். இது தீவிர கிட்னி பாதிப்பாகவும் இருக்க வாய்ப்புள்ளது.


தெளிவாக இருந்தால்

உங்கள் சிறுநீர் மிகவும் தெளிவாக (Transparent) இருந்தால் நீங்கள் அதிகமாக நீர் அருந்துவதின் அறிகுறியாகவும் இருக்கலாம். அளவுக்கதிகமாக தண்ணீர் குடிப்பதும் ஆபத்துதான். இது உங்கள் உடம்பில் உள்ள உப்பின் அளவை நீர்த்து போக செய்யும்.


வெளிர் மஞ்சள், தெளிவான மஞ்சள், அடர் மஞ்சள்

இந்த நிறத்தில் சிறுநீர் இருந்தால் நீங்கள் கவலைப்படவேண்டாம். பொதுவாக உங்கள் சிறுநீர் வெளிர் தங்க நிறத்தில் தான் இருக்க வேண்டும். வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் உடல் சரியான விகிதத்தில் இருக்கிறது.

சிறுநீர் அடர்த்தியாக இருந்தால் தண்ணீர் அதிகமாக குடியுங்கள். எப்போதும் ஒரு இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். சிறுநீர் எலுமிச்சை சாறு நிறத்தில் இருந்தால் எப்போதும் உங்களுக்கு நல்லது.

(நன்றி - மனிதன் இணையம்)

Author: verified_user

0 comments: