Tuesday, 23 January 2018

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! பொதுமன்னிப்பு அறிப்விக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் #பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி 29-018 அன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

குவைத் பிரதமரும் மற்றும் உள்துறை மந்திரியுமான ஷேக் கலீத் (Prime minister Sheikh Khaled Jarrah) அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் #ஜனவரி 29,2018 முதல் வரும் #பிப்ரவரி 22,2018 வரையில் 25 நாட்கள் பொதுமன்னிப்பு நடைமுறையில் இருக்கும் என்று அறிவித்துள்ளார்.இந்த நாட்களில் குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் கட்ட வேண்டிய பிழைகள் எதுவும் செலுத்தாமல் தாயம் செல்லலாம் என்று அறிவித்து உத்தரவும் வெளியிட்டுள்ளார்.
#இதில்_முக்கியமானவை:
1) வீட்டை விட்டு ஓடிய வழக்கு (Upsconding) இருந்தால் எளிதாக போக முடியும்.
2) திருட்டு மற்றும் பண வழக்குகளில் சிக்கி இருப்பவர்கள் வழக்கு முடிந்த பின் தான் செல்ல முடியும்.
3) கம்பெனிக்கு எதிராக வழக்கு தொடந்து விசா இல்லாமல் இருப்பவர்கள் (தொழிலாளியின் பெயரில் வழக்கு இருந்தால் விசா மாற்ற முடியாது) அபராதம் அடைத்து விசா மாற்ற முடியும்.

குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக குறைந்தது 1-லட்சத்தி 25000-க்கும் அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளால் வாடி வருகிறார்கள்.இதையடுத்து இந்த பொதுமன்னிப்பு அறிவிப்பு மூலம் பல ஆயிரக்கணக்கான பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை.

மேலும் இதில் முக்கியமான இந்திய மற்றும் இலங்கையைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பயன்பெறுவர்கள். இந்த பொதுமன்னிப்பு பற்றிய கூடுதல் தகவல்கள் அறிய வரும் நாட்களில் #இந்திய மக்கள் குவைத் #இந்திய_தூதரகத்தையும் #இலங்கை மக்கள் குவைத் #இலங்கை_தூதரகத்தையும் தொடர்பு கொள்ளுங்கள்.



Courtesy: Al-Anbaa
Reporting : KuwaitTamilPasanga

Author: verified_user

0 comments: