Monday, 1 January 2018

பாராளுமன்ற மன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இலங்கை அரசின் புத்தாண்டுப் பரிசு!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களின் வருடாந்த அஞ்சல் முத்திரை கொடுப்பனவுகள் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளன. 

100 வீதமாக இந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளது. 

வெளிநாட்டு அஞ்சல் சேவை மற்றும் விமான பொதிக்கட்டணங்களில் அதிகரிப்பு செய்யப்பட்டமையை அடுத்தே இந்தக்கொடுப்பனவு உயர்வு மேற்கொள்ளப்படவுள்ளது. 

தற்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு முத்திரை கொடுப்பனவாக ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபா கிடைக்கிறது.  இது நாளை முதல் மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. 

அதேநேரம் மாகாணசபை உறுப்பினர் ஒருவருக்கு தற்போது முத்திரைக்கட்டணம் 24 ஆயிரமாக உள்ளது 

இது 48ஆயிரமாக உயர்த்தப்படவுள்ளது. 

இந்தநிலையில் மக்கள் பிரதிநிதிகளுக்கு முத்திரை கொடுப்பனவுகள் உயர்த்தப்பட்டாலும் பொதுமக்கள் இந்த கட்டணங்களின் அதிகரிப்பை தவிர்க்க முடியாதிருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Author: verified_user

0 comments: