Wednesday, 3 January 2018

சவூதியில் ATMயில் பணம் எடுக்க எந்த வாட்வரியும் இல்லை! வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என கோரிக்கை!

ஜனவரி முதலாம் திகதி முதல் சவூதி அரேபியாவில் வாட்சரி அறிமுகத்தைத் தொடர்ந்து பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று ATMயில் எடுக்கும் பத்திற்கு 5 வீத வாட் வரி அறவிடப்படுகின்றது. என்பதாகும். 

இந்த தகவலை சவூதி அரேபியா மறுத்துள்ளதுடன் ATM யில் எடுக்கும் பணத்திற்கு எந்த விதமான வரியும் அறவிடப்படமாட்டாது என்பதாக உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் இது போன்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆங்கிலத்தில் - Saudi Gazette
தமிழில் - உண்மையின் பக்கம்

Author: verified_user

0 comments: