Thursday, 18 January 2018

அமீரகத்தில் 500 திர்ஹம் முதல் போக்குவரத்து அபராதங்கள் தவணை முறையில் கட்டலாம்!

துபையின் புதிய சலுகையாக வட்டியின்றி போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை கட்டும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துபை இஸ்லாமிக் பேங்க் கிரடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மட்டும் குறைந்தது 500 திர்ஹம் முதல் போக்குவரத்து அபராதங்களை தங்களுக்கு ஏற்றவாறு 3, 6, 9, 12 ஆகிய மாதத் தவணைகளை முன்கூட்டியே தேர்வு செய்து வட்டியின்றி அசல் அபராதத் தொகையை மட்டும் செலுத்தலாம்.

500 திர்ஹத்திற்கு கீழுள்ள போக்குவரத்து விதிமீறல் அபராதங்களுக்கு இந்த தவணை வசதி கிடையாது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) துபை போலீஸ் மற்றும் துபை இஸ்லாமிக் பேங்க் ஆகிறவற்றுக்கு இடையே கையெழுத்தானது.

Source: Khaleej Times 
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: