Saturday, 20 January 2018

கழுத்தில் சிக்கிய டயருடன் 2 ஆண்டுகளாக உயிர் வாழும் முதலை (படங்கள்)

பூனைக்கு யார் மணி கட்டுவது? என்ற பழமொழிக்கு ஏற்ப யார் இந்த முதலையை டயரில் இருந்து விடுப்பது என மக்கள் யோசித்துக் கொண்டே இன்னும் இருந்து கொண்டுள்ள நிலையில் சுமார் 2 வருடங்கள் ஓடிவிட்டன அதனால் முதலையும் 2016 ஆம் வருடம் முதல் டயருடன் வாழப் பழகிவிட்டது.

இந்தோனேஷியா, மத்திய சுலவேஸி மாகாணத்தின் (Central Sulawesi) தலைநகர் பாலு (Capital Palu) ஓடும் ஆற்றின் பெயரும் பாலு (Palu River) தான். இங்கு வாழும் ஓர் உப்புநீர் முதலை (salt Water Crocodile) ஒன்றின் கழுத்தில் சுமார் 2 வருடங்களுக்கு முன் அதை பிடித்து வளர்ப்பு பிராணியாக வளர்க்கும் நோக்கில் பைக் டயரை மாட்டிவிட்டுள்ளனர் ஆனால் முதலை பிடிபடாமல் தப்பித்திருக்கும் என வனத்துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்து தங்கள் கடமையை முடித்துக் கொண்டனர்.

ஆனால் ஒன்று! 2 வருடங்களாக ஒரு பழைய பைக் டயர் நீரிலும் நிலத்திலும் அப்படியே இருக்கிறதென்றால் நிச்சயம் நல்ல குவாலிட்டியான டயருங்க அது, அந்த கம்பெனி டயரை நம்பி வாங்கலாம் போல!

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்






Author: verified_user

0 comments: