Friday, 12 January 2018

சவுதி அரேபியாவின் இன்னுமொரு அதிரடி! 25 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு சுற்றுலா விசா!

சவுதியில் தற்போது வேலைவாய்ப்பு, விசிட் மற்றும் ஹஜ் உம்ரா செய்வதற்கான விசாக்கள் வழங்கப்படுகின்றன. இவை தவிர்த்து புதிதாக சுற்றுலா துறையை ஊக்கப்படுத்தும் வகையில் புனித மக்கா மற்றும் மதினா தவிர்த்து பிற சுற்றுலா இடங்களுக்கு 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தனியாக வந்து செல்ல அனுமதிக்கும் விசாக்களை வழங்கப்போவதாக சவுதியின் சுற்றுலா மற்றும் பராம்பரிய சின்னங்களுக்கான ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த அனுமதி பட்டத்து இளவரசர் முஹமது பின் சல்மானின் சர்வதேச அரங்கில் சவுதி அரேபியாவின் மார்க்க பிடிப்பு முகத்தை மாற்றியமைத்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களில் ஒன்று என பட்டவர்த்தனமாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரானிக் விசாக்களை பெறுவதற்கான ஆன்லைன் திட்டங்கள் இறுதி வடிவம் பெற்று வருகிறதாம். இந்த சிங்கிள் என்ட்ரி விசாக்களில் வருபவர்கள் 30 நாட்கள் வரை தங்கியிருக்க முடியும்.

ஒரு சாதாரண மனிதன் தான் காசுக்காக எந்த எல்லைக்கும் செல்வான் என சொல்வோம் ஆனால் இன்று ஒரு நாடே செல்கிறதென்றால்? அமெரிக்காவில் படிப்பு எனும் மூளைச்சலவையின் வலிமை இது.

Source: Gulf News
தமிழில் : நம்ம ஊரான்



Author: verified_user

0 comments: