Tuesday, 23 January 2018

சிறுநீர் கழிக்க காரை நிறுத்திய கணவன்: 22 வயது மனைவிக்கு நேர்ந்த அநியாயம்

இந்தியாவின், குர்கானில் இளம்பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மைத்துனருடன் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்புகையில் நான்கு நபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செக்டார் 56 பகுதியிலுள்ள, பிசினஸ் பார்க் டவர் என்ற சாலையில் இரவு ஒன்பது மணியளவில் இவர்களது கார் பயணித்துக்கொண்டிருந்தது. அப்போது, சிறுநீர் கழிப்பதற்காக கணவர் காரை ஓரமாக நிறுத்தியுள்ளார்.

அப்போது, அங்கே வந்த நான்கு பேர், எதற்காக இங்கு காரை நிறுத்தியுள்ளீர்கள் என அதிகாரமாக கேட்டுள்ளனர்.

இதற்கு, காருக்குள் இருந்த மைத்துனர் பதில் சொல்லிக்கொண்டிருக்கையில், அவர்களின் பார்வை காருக்குள் இருந்த அப்பெண்ணின் மீது பட்டுள்ளது.

அதன்பிறகு, அவர்கள் நால்வரும் துப்பாக்கி முனையில் கணவர் மற்றும் மைத்துனரை மிரட்டி நிற்கவைத்துவிட்டு, அப்பெண்ணை மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.

இப்படி மாறி, மாறி அந்த பெண்ணை பலாத்காரம் செய்த பிறகு நால்வரும் காரில் தப்பினர்.

பலாத்கார கொடூரர்கள் தப்பிச் சென்ற கார் ஒன்றின் பதிவு எண்ணை அப்பெண்ணின் கணவர் கவனித்துக்கொண்டார்.

இதுகுறித்து பொலிசில் புகார் அளித்ததையடுத்து, குர்கான் பொலிசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கார் பதிவு எண்ணை வைத்து, சோஹ்னா பகுதியிலுள்ள ஜோகல்கா கிராமத்தை சேர்ந்த நான்கு குற்றவாளிகளான Faridabad, Jind, Fatehabad, Hisar மற்றும் Kurukshetra ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Author: verified_user

0 comments: