Friday, 5 January 2018

2018ம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க இருப்போருக்கான முக்கிய அறிவித்தல்!


2017/2018 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பம் உள்ளடங்கிய கையேடு விநியோகிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற உயர் தரப்பரீட்சையின் ஊடாக ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 104 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவிற்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இம்முறை பல்கலைக்கழகத்திற்கு 30 ஆயிரத்து 500 மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதன்படி இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை பல்கலைக்கழகத்திற்காக இணையத்தளத்தின் ஊடாக மாத்திரம் விண்ணப்பங்களை முன்வைக்க முடியும்.

கையெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைய இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை அனுப்புமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மாணவர்களிடம் கோரியுள்ளது.

இணையத்தளம் http://www.ugc.ac.lk/

Author: verified_user

0 comments: