Saturday, 6 January 2018

ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட பயணிகள் விமானம்: 168 பயணிகளின் நிலை?

கனடாவில் பயணிகள் விமானம் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் டோரண்டோ நகரின் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மெக்சிகோவின் கேன்கன்னிலிருந்து வந்தடைந்த வெஸ்ட்ஜெட் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்று தரைத் தளத்தில் நின்றுக் கொண்டிருந்த மற்றுமொரு விமானம் மீது மோதியுள்ளது.

இந்த மோதலினால் விமானத்தின் இறகுப் பகுதியில் தீ பிடித்தது. உடனடியாக விரைந்து வந்த டோரண்டோ விமான நிலைய அதிகாரிகள் விமானத்திலிருந்து 168 பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளனர்.

மேலும் விமான நிலையம் சார்பில், விமானத்தில் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை என்றும், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Author: verified_user

0 comments: