Friday, 12 January 2018

சவுதி அரேபியாவின் 147 வயது மூத்த குடிமகன் வஃபாத் !

சவுதி அரேபியாவின் இயற்கை ஆர்வலரும், மூத்த குடிமகனுமாகிய ஷேக் அலி அல் அலக்மி 147 வயதில் வஃபாத். (காலமானார்)

சவுதி அரேபியாவின் அப்ஹா நகரில் வாழ்ந்து வந்த ஷேக் அலி அல் அலக்மி (Sheikh Ali Al-Alakmi) என்ற 147 வயது மூத்த குடிமகன் கடந்த வாரம் மரணமடைந்தார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். ஷேக் அவர்கள் ஒரு இயற்கை ஆர்வலர் என்பதும் இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவுகளையே உண்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்போதும் குர்;ஆன் ஓதுவதில் அதீத ஈடுபாடு கொண்ட ஷேக் அவர்கள் விரல் லிட்டு எண்ணத்தக்க அளவில் பயணம் செய்திருந்தாலும் காரில் பயணம் செய்வதை விரும்புவதே இல்லை. ஓருமுறை அப்ஹாவிலிருந்து நடைபயணமாக சுமார் 600 கி.மீ மக்காவிற்கு பயணம் செய்து ஹஜ்ஜை நிறைவேற்றினார், இந்த நடை பயணத்தின் நோக்கம் சாதனை செய்வதல்ல மாறாக நடப்பது என்பது அவரது இயல்பு என்பதால் மட்டுமே நடந்து சென்றார்.

அவருடைய சொந்தப் பண்ணையில் இயற்கை உரங்கள் கொண்டு விளைவிக்கப்படும் தானியங்கள், கோதுமை, சோளம், பார்லி (வாற்கோதுமை), தேன் போன்றவற்றையே உணவாக (Organic Foods) எடுத்துக் கொண்டுள்ளார். அதேபோல் மாமிசங்களும் தன்னுடைய பண்ணையில் வளர்ந்த கால்நடைகளிலிருந்தே மாமிச உணவுகளை புசித்து வந்தார். ஐஸ் கொண்டு பதப்படுத்தப்பட்ட உணவுகளையோ விழாக்கால உணவுகளை தவிர்த்து வந்தார்.

இவருடைய 38 வது வயதின் போது தான் அப்போதைய மன்னர் அப்துல் அஜீஸ் பின் சவுது அவர்கள் அஸீர் பிரதேசத்தை கைப்பற்றி சவுதி அரேபியாவின் ஒரு பகுதி என அறிவித்தார். இவருடைய காலத்திய மனிதர்கள் யாரும் உயிருடன் இல்லாததால், என்னுடைய அழகான இளமைக்கால வாழ்க்கை மிகச்சிறந்த ஒன்று இனி அது கிடைக்கப்போவதில்லை என இறக்குமுன் நினைவுகளை கூறிவந்தார். இவருடைய மகன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் மகள் மட்டுமே உயிருடன் உள்ளார்.

Sources: Al Arabiya English & Khaleej Times
தமிழில் : நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: