Wednesday, 6 December 2017

GCC கூட்டம் தோல்வியைத் தொடர்ந்து புதிய கூட்டணியாக இணையும் UAE-சவுதி நாடுகள்!

கட்டாருடனான முறுகல் நிலையில் மீண்டும் அரபு நாடுகளுக்கிடையில் ஒற்றுமை உருவாகும் சந்தர்ப்பமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வளை குடா நாடுகளுக்கிடையிலான கூட்டுறவுக்கான அமைப்பின் கூட்டம் தோல்வியில் முடிந்துள்ளது.
6ம் திகதி  வரை தொடரவிருந்த கூட்டம் 5ம் திகதியோடு முடிவுற்று பிரதிநிதிகள் குவைத்தை விட்டு வெளியேறி வருவதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வளைகுடா நாடுகளின் அமைப்புக்குப் பகரமாகத் தாம் சவுதி அரேபியாவுடன் பிரத்யேகமான பொருளாதார – இராணுவ கூட்டுறவுக்கான செயற்திட்டத்தை உருவாக்கியுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், வளைகுடா நாடுகளுக்கிடையிலான கூட்டுறவு அமைப்பின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.


Author: verified_user

0 comments: