Saturday, 2 December 2017

GCC அமைப்பின் கூட்டத் தொடர் டிசம்பரம் 5ம், 6ம் திகதிகளில், - கத்தார், சவூதி பற்கேற்பு.! நிலைமைகள் சீராக பிரார்த்திப்போம்.

மத்திய கிழக்கில் அரபு நாடுகளுக்கிடையில் பிணக்கு தொடர்கின்ற நிலையில் எதிர்வரும் 5ம் மற்றும் 6ம் திகதிகளில், குவைத்தில்  இடம்பெறவுள்ள வளைகுடா நாடுகளின் கூட்டுறவுக்கான அமைப்பின் கூட்டத்தில் சவுதி – கட்டார் இரு நாடுகளும் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டார் அமீருக்கு இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குவைத் அறிவித்துள்ள நிலையில் சவுதி அரேபியாவும் பங்கேற்பதை உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத் தொடரானது வளைகுடா நாடுகளின் கூட்டுறவுக்கான அமைப்பின் 38 அமர்வு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: