Monday, 25 December 2017

கணவனது ஈமெயிலை தெரியாமல் திறந்து பார்த்தவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை!

கணவரின் இமெயில் கணக்கை அவர் அனுமதியில்லாமல் மனைவி திறந்து பார்த்த நிலையில் அவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது, ஒரு கணவனும், மனைவியும் அங்கு வாழ்ந்து வந்த நிலையில் தங்களின் எல்லா வித இணைய பாஸ்வேர்டுகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கணவன் புது இமெயில் முகவரி ஆரம்பித்த நிலையில் அதுகுறித்து மனைவியிடம் சொல்லவில்லை.

இதை கண்டுப்பிடித்த மனைவி கணவன் மீது சந்தேகப்பட்டு அவரின் வேறு பாஸ்வேர்டை புதிய கணக்கில் பதிவிட கணக்கு திறந்துள்ளது.

அப்போது தான், தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை மனைவி கண்டுப்பிடித்துள்ளார்.

இதுகுறித்து கணவரிடம் கேட்க அவர் மனைவியுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறியதோடு தனது அனுமதியில்லாமல் இமெயில் கணக்கை மனைவி திறந்ததாக நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி மனைவி செய்தது குற்றம் என கூறி 14200 பிராங்குகள் அபராதம் விதித்தார்.

இதை எதிர்த்து மனைவி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போது, கணவரின் கணக்கை ஹேக் செய்யவில்லை எனவும், பாஸ்வேர்ட் போட்டு தான் திறந்ததாகவும் மனைவியின் வழக்கறிஞர் வாதாடினார்.

இதையடுத்து மனைவியின் அபராத தொகையை குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Author: verified_user

0 comments: