Friday, 1 December 2017

யெமனிலிருந்து சவுதி அரேபியா நகரை தாக்க வந்த ஏவுகணை நடுவானில் அழிப்பு!

(ARAB NEWS) சவுதி அரேபியாவின் நகரை தாக்க வந்த பாலிஸ்டிக் ஏவுகணை தாக்கி அழிக்கப்பட்டது.

ஏமனில் உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில் போராட்டக்காரர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் செயல்பட்டு வருகின்றன.

எனவே சவுதி அரேபியாவை பழிவாங்குவதற்காக ஹவுதி போராட்டக்காரர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்த முயற்சி செய்கின்றனர்.

கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் ரியாத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து வீசப்பட்ட ஏவுகணையை சவுதி ராணுவம் நடுவானில் இடைமறித்து அழித்தது.

இந்நிலையில் நேற்று மீண்டும் தென்கிழக்கு பகுதியில் உள்ள Khamis Mushait நகரை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணை வீசப்பட்ட நிலையில் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை சவுதி தலைமையிலான கூட்டுப்படையின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் Turki al-Maliki உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் எவ்வித ஆபத்தும், சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் எங்கு எப்படி தாக்கி அழிக்கப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

இச்சோதனை முயற்சி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக ஹவுதி போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: verified_user

0 comments: