Friday, 15 December 2017

சவூதியின் அதிரடி முடிவால் இலங்கையில் பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியில்!

மாற்று நடவடிக்கையை சிந்திக்குமா சமூகம்.

வெகு விரைவில் பல தாஇகள் வெளிநாடுகளுக்கும், பல மத்றஸாக்கள் மூடு விழாவை நோக்கியும், நிருவணங்கள் நிர்கதியாகவும், அனாதைகளது கல்வி மற்றும் வாழ்க்கை போராட்டம் கேள்விக் குறியாகவும் வாய்ப்புள்ளது.

அல்லாஹ் பாது காப்பானாக

சவூதியில் இருந்து வழங்கப் பட்டு வந்த பல்வித உதவிப் பணங்கள் தடை பட்டுள்ள நிலையில்! அவைகள் முற்றாக நிறுத்தப் படக் கூடிய வாய்ப்பும், சவூதியின் உள்நாட்டுப் புரட்சிக்கான தடயங்களும் மேலோங்கி வருகின்றன.

சவூதிப் பணத்தால் ஏப்பம் விட்டவர்கள் என சிலர் இருந்தாலும், வெறும் 500 ரியால் பணத்தை மாதாந்த ஊதியமாக பெற்று சன்மார்க்க பிரச்சாரத்திலும், மத்ரஸாக்களின் உஸ்தாத்களாகவும் பலநூறு தாஇகள் இந்நாட்டில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் சவூதியில் ஏற்பட்டு வரும் அரசியல் கொள்கை மாற்றங்களால் இச்சிறிய ஊதியமும் கிடைக்காமல் தாஇகள் திண்டாடுகின்றனர்.

இத்திண்டாட்டம் இவர்களை வெளிநாடுகளுக்கு வழியனுப்பி விட்டால்! நாட்டில் தஃவா பணி பாரிய பின்னடைவுகளை சந்திக்கும் துர்பாக்கிய நிலமை உருவாகும்.

எனவே இது குறித்து ஆராய்ந்து அவசர மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவையை சம்பந்தப் பட்டவர்கள் உணர வேண்டும்.

குறிப்பாக பள்ளி கட்டுவதிலும், கிணறு கட்டுவதிலும் காலத்தை ஓட்டிவந்த நிருவணங்கள் இதுவரை எம்மை நம்பியுள்ள அனாதைகள், விதவைகள், அழைப்பாளர்கள் விடயத்தில் நிரந்தர வருமானத்துக்கான எந்த தூர நோக்குச் சிந்தனையும் அற்றிருந்த இயலாமையை இப்போதாவது உணர்ந்து, துரிதமாக அதற்கான வாசலை திறக்க முயல வேண்டும்.

சவூதியின் இன்னும் எஞ்சிருக்கும் பொற்காலத்தை வாய்ப்பாக பயன்படுத்தி, அதிகமானவர்களுக்கு தொழில் வழங்கக் கூடிய மாதரியான தொழிற்சாலைகளை உருவாக்குவதிலோ, தையல், கட்டட வேலை, தளபாட வேலை, பாதணி உற்பத்தி போன்ற இன்னோரன்ன கைதொழில்களுக்கான வழிகளை உருவாக்குவதிலோ கவனம் செலுத்தலாம்.

அணிந்த ஆடையில் தூசு படாத வேலைகளை தேடும் சமூகத்தின் அழைப்பாளர்களும் நிலமையின் யதார்த்தத்தை உணர்ந்து, சோம்பேறித்தனத்துக்கும், வரட்டு கௌரவத்துக்கும் விடை கொடுத்து உழைத்து உண்டு அல்லாஹ்வுக்காக பணிகள் செய்யும் பழக்கத்துக்கு தம்மை உற்படுத்த வேண்டும்.

இச்சாமானியனி்ன் மனக்குமுறலில் நியாயம் இருந்தால் சற்று சிந்தனை செய்து திட்டங்களை மேற்கொள்ளுங்கள்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்

அபூ ஸுமையா
மடவளை (15/12/17)

Author: verified_user

0 comments: